• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குனியமுத்தூரில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூன்று பேர் கைது

November 18, 2019

கோவை குனியமுத்தூர் அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்து தப்பி மூன்று பேரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கோவை குறிச்சி ஷஜ்ரத் பிலால் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (26) இவர் ஏ,சி. மெக்கானிக், மற்றும் பெய்ண்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் சிட்கோவில் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்துள்ளார்,. அப்போது செந்தமிழ்நகர் எஸ்.எஸ்.கார்டன் அருகே வரும் போது அங்கு வந்த மூன்று பேர் முகமது உசேனை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து முகமது உசேன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் சுகுணாபுரம் அருகே இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் எஸ்.ஐ மாரியப்பன் உள்ளிட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலிசை பார்த்த மூன்று பேர் தப்பி ஓடினார்கள், விரட்டி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் நிஷாரூதின் (25), பீர் முகமது (41), சூரியா (20) என்பதும் இவர்கள் தான் முகமது உசேனிடமிருந்து செல்போன் பணத்தை பிடிங்கி சென்றதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட நிஷாரூதின் மீது ஏற்கனவே பல திருட்டு , செயின் பறிப்பு மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் பல முறை கஞ்சா விற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் இருந்ததும் தெரியவந்தது. அடிக்கடி செயின் பறிப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீஸாரிடமிருந்து தலைமறைவாகி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி வழக்கறிஞர் மூலம் ஜாமினில் வெளியே வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தது, தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க