• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குண்டு வெடிப்பு எதிரொலி : இலங்கையில் பெண்கள் முகத்திரை அணிய தடை

April 29, 2019 தண்டோரா குழு

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து பெண்கள் முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் ஏப்.19ல் வெடிகுண்டு வெடித்ததில் 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்துயரச் சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் அந்நாட்டு அரசு பாதுகாப்பை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் குண்டிவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் முகத்திரை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா உடை அணிந்து தீவிரவாதிகள் இது போன்ற நாசக்கரா வேளைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.இதையடுத்து, அந்நாட்டு அரசு எந்த மதத்தவரும் இன்று முதல் முகத்திரை அணியக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். நாட்டில் நிலவும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்தா அணிந்து அதன் பின்னால் தீவிரவாதிகள் ஒழிந்து கொள்வதால் அதற்கு தடைவித்துள்ள ஐரோப்பா மற்றும் சிலஆசிய நாடுகள், ஆப்ரிக்கா நாடுகள் பட்டியலில் தற்போது இலங்கையும் இணைந்துள்ளது.

மேலும் படிக்க