• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குண்டு பெண் டிஸ்சார்ஜ் ஆகிறார்

May 4, 2017 தண்டோரா குழு

உடல் பருமனை குறைக்க மும்பையில் சிகிச்சை பெற்று வந்த இமான் அஹமது வியாழக்கிழமை
(மே 4) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

எகிப்து நாட்டை சேமருத்துவமனையிலிருந்து ர்ந்த இமான் அஹமது (39) என்னும் பெண்மணி உலகிலேயே அதிக எடையுடையவர் என்று கருதப்பட்டார். உடல் பருமனை குறைக்க வேண்டி, இவர் பிப்ரவரி மாதம் மும்பையிலுள்ள சைபீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருடைய உடல் எடை 5௦௦ கிலோவாக இருந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க அம்மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் முபஷல் லக்டாவாலா முன் வந்தார்.கடந்த இரண்டு மாத காலமாக அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல் எடை குறைந்ததை அடுத்து, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

இமானுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் முப்பாசல் லக்டவாலா கூறுகையில்,

இமான் அகமதுவின் உடல் எடை 177 கிலோவாக குறைந்துவிட்டது.அவருடைய உடல் நலம் நிலையாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. அவருடைய உடல் நிலை முன்னேற்றத்தை குறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இவருடைய சிகிச்சைக்காக இதுவரை 3 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.இருந்தாலும், அவரிடம் இருந்து நாங்கள் பணம் வாங்கவில்லை. சுமார் 65 லட்சம் ரூபாய் நன்கொடையாக இந்திய மக்களிடமிருந்து கிடைத்தது. ” என்றார்

விபிஎஸ் சுகாதார குழுவின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,

“அவருக்கான அடுத்தக்கட்ட சிகிச்சை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள புர்ஜில் மருத்துவமனையில் தொடரும். அவரை மும்பையிலிருந்து அழைத்துச்செல்ல விசேஷ விமானத்தை ஏற்பாடு செய்துள்ளோம்” இன்று மாலை 6 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து அபு தாபிக்கு பயணமாகிறார்.

என்றார்.

மேலும் படிக்க