• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு – கோவை தொழிலாளி அசத்தல்

April 5, 2019 தண்டோரா குழு

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குண்டு பல்ப்பில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பத்தை கோவை நகை பட்டறை தொழிலாளி வடிவமைத்துள்ளார்.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு வருகிறது. மறுபுறம் தேர்தல் ஆணையமும் வாக்களிக்க மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதைப்போல் இந்தியா முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை சமூக அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, குண்டு பல்ப்பின் உள் இழையில் மனித உருவம் போல் ஒரு சிற்பத்தை உருவாக்கி, அதன் இரு கைகளில் 100% வாக்களிப்போம் என்பதை வெளிக்காட்டும் விதமாக வடிவமைத்து உள்ளார். பல்பின் கீழே vote என்ற ஆங்கில எழுத்தும், தேர்தல் தேதியையும் உருவாக்கி உள்ளார். மற்றொரு பல்ப்பில் நாடு ஒளிர 100 % வாக்களிப்போம் என்ற வாசகமும் தேர்தல் தேதியை பதிவிட்டு உள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக இந்த படைப்புகளை வைக்க அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்தால் இது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

இவர் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிற்பங்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க