• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்ப தகராறை தடுக்க சென்ற அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து- டிரைவர் கைது

July 14, 2020 தண்டோரா குழு

கோவை ஆலாந்துறை மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (29) டிரைவர். இவரது மனைவி சங்கீதா 25. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குமரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது இதனால் சங்கீதா கோபித்துக்கொண்டு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வடிவேலம்பாளையம் அதில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

சம்பவத்தன்று மனைவி வீட்டுக்கு சென்ற குமரேசன் அவரை தன்னுடன் வந்து விடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதை கண்ட சங்கீதாவின் உறவினர்கள் கருப்புசாமி 35 அவரது தம்பி அஜித் 32 ஆகியோர் அங்கு வந்து குமரேசனை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்புசாமி மற்றும் அஜித்தை சரமாரியாக குத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பின்னர் இதுகுறித்து கருப்பசாமி ஆலந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க