• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்பத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் தோனி !

May 6, 2019

2019 மக்களவைத் தேர்தலுகான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5ம் கட்டமாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் இன்று 2வது கட்டமாக நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது மனைவி சாக்‌ஷி, அவரது தாய், மகளுடன் சென்று தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

மேலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தனது மகள் பேசும் வீடியோ ஒன்றை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது தந்தையும், தாயையும் போல அனைவரும் சென்று வாக்களியுங்கள் என்று ஸீவா கூறுகிறார் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க