குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தைக் கிளப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், அரசியல் அமைப்புகள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில்,இந்த கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்திருத்தை மத்திய அரசு அமுல்படுத்துவதாக தெரிவித்து இன்று நாடு முழுவதும் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராவகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக பதாகைகள் வைத்தபடி கோசங்களை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ஹாஜாஹுசேன்,
நாடு முழுவதும் கொரொனாவால் உயிரிழந்து வரும் மக்களை பாதுகாக்காமல் குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்துவதில் நோக்கமாக மத்திய அரசு உள்ளதாகவும், அனைவரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் ஒதுக்கிவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கோவையில் 500இடங்களில் போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது