• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசு தினவிழாவை ஒட்டி கோவையில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்

January 22, 2021 தண்டோரா குழு

குடியரசு தினவிழாவை ஒட்டி கோவையில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை டவுன்ஹால், மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள கதர் நிறுவனங்களில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கதர் துணி, மைக்ரோ துணி, வெல்வெட் துணி ஆகியவற்றைக் கொண்டு, 8-க்கு 10, 12-க்கு 10, 16-க்கு 20, 20-க்கு 30, 30-க்கு 40, 36-க்கு 54, 46-க்கு 60, 40-க்கு 72 ஆகிய இன்ச் அளவுகளிலும், 5-க்கு 12, 12-க்கு 20, 15-க்கு 30 ஆகிய அடி அளவுகளிலும் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கதர்துணியினால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் குறைந்த பட்சமாக 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 ஆயிரம் வரையும், மைக்ரோ துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் 30 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,500 ரூபாய் வரையும், வெல்வெட் துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சமாக 80 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தேசியக்கொடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில்,

வழக்கமாக குடியரசு தினத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணி தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பு இருந்து தான், தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.வழக்கமாக பள்ளிகள், கல்லூரிகளில் வளாகங்களில் கட்டுதல், ஏற்றுவதற்கு என அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும். ஆனால் தற்போது, கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்படாததால் எதிர்பார்த்த அளவுக்கு அங்கிருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை.

மேலும், கோவையில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள், கோவையை ஒட்டியுள்ள வெளி மாவட்டங்கள், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனத்தினர் தேசியக் கொடிகளை ஆர்டர் செய்து, வாங்கிச் செல்வார்கள். ஆனால், நடப்பாண்டு கொரோனா அச்சத்தால் இந்த ஆர்டரும் குறைந்து காணப்படுகிறது. நாங்கள் மொத்தமாக துணியை வாங்கி, அளவை கூறி, எங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தையலர்களுக்கு பிரித்து அளிப்போம். அவர்கள் அளவுக்கு ஏற்ப, தைத்து எங்களிடம் அளித்த பின்னர், 1 இன்ச் முதல் 42 இன்ச் அளவு வரை, கொடியின் அளவுக்கு ஏற்ப, நாங்கள் அதில் அசோக சக்கரத்தை பதித்து, இறுதிக்கட்ட பணிகளை முடித்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.

வாடிக்கையாளர்கள் 30-க்கு 40, 20-க்கு 30, 12-க்கு 10ஆகிய இன்ச் அளவுகளில் உள்ள தேசியக் கொடியை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் இந்நேரத்துக்கு பல அளவுகளில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான கொடிகள் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும். ஆனால், கொரோனா அச்சத்தால் தற்போது சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கொடிகளே இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, வழக்கமான விற்பனை அளவுகளில் இருந்து, குறிப்பிட்ட சதவீதம் கொடிகள் விற்றுவிடும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க