• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

March 11, 2019 தண்டோரா குழு

நடப்பாண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இதில், மலையாள சினிமா நடிகர் மோகன்லால், சர்தார் சுக்தேவ் சிங் தின்சா, ஹூகும்தேவ் நாராயண் யாதவ் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருதுகளும், பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டென்னிஸ் வீரர் ஷரத் கமல், செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா டிரோநவாளி,இசையமைப்பாளரும் பாடகருமான ஷங்கர் மகாதேவன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு 16ம் தேதி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க