• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.,வை அதிமுக ஆதரிக்கும் – பொன்.ராதாகிருஷ்ணன்

June 8, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை அதிமுக ஆதரிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க., சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக, பாஜக வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.

திருவள்ளுவர் பிறந்த நாள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டது. ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவள்ளுவர் பிறந்த தினத்தை மாற்றினார்.

தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரை முதல் நாளுக்கு மாற்றியது போல, திருவள்ளுவர் பிறந்த நாளும் மீண்டும் வைகாசி மாத அனுஷம் நட்சத்திர தினத்துக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும்.”
என்றார்.

மேலும் படிக்க