September 18, 2017 
தண்டோரா குழு
                                குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 
 தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (செப்.,18) சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 ஆனால், அவர் திடீரென மும்பையில் இருந்து டில்லி புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை  சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படதாக கூறப்படுகிறது.
 ராஜ்நாத் சிங்கை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும் கவர்னர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, பரபரப்பு சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.