October 17, 2020
தண்டோரா குழு
குடிப்பதை நிறுத்தச்சொன்ன மனைவியை பூரி கட்டையால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் பூ வியாபாரம் செய்து வருகிறார். காஜா உசேனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை அவரது மனைவி தட்டிக் கேட்டார்.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு காஜா உசேன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கடுமையாக கண்டித்தார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த கணவர் அங்கிருந்து பூரி கட்டையை எடுத்து மனைவியின் நெற்றியில் ஓங்கி அடித்தார்.இதில் அவரது நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது வலி தாங்க முடியாமல் மனைவி அலறி சத்தம் போட்டால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ரத்தமாக தலை முழுவதும் ரத்தமாக இருந்தது அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனைவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜா உசேன் கைது செய்தனர்.