• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசில் சிக்கும் நபர்களுக்கு நூதன தண்டனை

January 21, 2019 தண்டோரா குழு

ஐதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசில் சிக்கும் நபர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு காவல்துறை கடிதம் அனுப்பிவருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் இங்கு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இந்தியாவை பொறுத்த வரை பெரிய அளவில் தண்டனை வழங்கப்படுவது கிடையாது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு தற்போது மிகவும் வித்தியாசமான தண்டனைகளை வழங்க தொடங்கியுள்ளது ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை.

ஐதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த நூதன நடவடிக்கையை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர் பிடிபட்ட இடம், நேரம், தேதி அவரது பெயர், முகவரி, ஆகியவற்றை குறிப்பிட்டு அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு காவல்துறை தகவல் அனுப்பிவருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் வேலையை கூட இழக்க நேரிடலாம். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பணியாளரை அவமானப்படுத்துவதோ அல்லது அவர் பணியாற்றும் நிறுவனத்தை அவர் மீது நடவடிக்கை எடுக்கவைப்பதோ தங்கள் நோக்கம் அல்ல எனக் கூறியுள்ள ஐதராபாத் காவல்துறை இது ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

இந்த தண்டனை வித்தியாசமானதாக பார்க்கப்பட்டாலும் கூட சற்று கடுமையாகதான் உள்ளது. இனி வருங்காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க