• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிலோ ஒரு ரூபாய்க்கு 2,657 கிலோ வெங்காயம் விற்பனை – விவசாயி வேதனை

December 10, 2018 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2657 கிலோ வெங்காயம் விற்றதில் 6 ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியதால் விவசாயி அந்தப்பணத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த சில திங்களாகவே வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயகள் கடும் வேதனையில் உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா அகமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அபாலே என்ற விவசாயி தன் தோட்டத்தில் விளைவித்த 2 ஆயிரத்து 657 கிலோ வெங்காயத்தை விற்க சங்கம் நெர் நகரில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றார்.

அங்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் 9 காசுகளுக்கு மட்டுமே வெங்காயம் விலை போயுள்ளது. இதன் முலம் அவருக்கு 2 ஆயிரத்து 916 ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாய் கிடைத்த பணத்தை வைத்து போக்குவரத்துச் செலவு, மூட்டைகளை தூக்கிச் சென்றவர்களுக்கு கூடுத்த கூலி போக மிச்சம் உள்ள 6 ரூபாயை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க