• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிருஸ்துமஸ் பண்டிகைக்காக கோவையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வால் நட்சத்திரம் !

December 14, 2018 -ச.ச.சிவசங்கர்

கிருஸ்துமஸ் பண்டிகைக்காக உருவாக்கபட்டுள்ள பிரமாண்ட வால்நட்சத்திரம் கோவையில் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஸ்துமஸ். அதேபோல் இந்தியாவிலும் ஆண்டுதோரும் கிருத்துவ மக்களடையே
கொண்டபட்டு வருகிறது. ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் வரும் கிருஸ்த்துமஸ் பண்டிகையை கொண்டாட அந்த மாத தொடக்கத்திலிருந்தே தயாராகிவிடுவார்கள். அனைவரின் வீட்டிலும் மாலை வேளையில் வண்ண வண்ண நட்சத்திர விளக்குகள் ஒன்று தொங்கி கொண்டு இருக்கும், அதை பெரும்பாலானோர் பார்த்திருப்போம். இந்நிலையில், கிருஸ்துமஸ் நட்சத்திரங்கள் ஒரு பிரமாண்டத்தை கண்டிருக்கிறது. கோவை கவுண்டம்பாளையத்தில் இருக்கும் புனித ஜோஸப் ஆலயம் 1985ல் கட்டப்பட்டு இன்றுவரை இயங்கி வருகிறது. இந்த ஆலய விரிவாக்கத்தை ஆலயத்தின் நிர்வாகிகள். மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் (SMYM) என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35அடி உயரத்தில் ஒரு பெரிய நட்சத்திரத்தை செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்த பெரிய நட்சத்திரத்தின் செய்த அனுபவத்தின் உத்வேகத்தில் இந்த ஆண்டு 72அடி உயரமும் 45அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான வால்நட்சத்திரத்தை ஆலயத்தின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் உருவாக்கியுள்ளனர். இது போன்ற பெரிய நட்சத்திரம் இதுவரையில் கோவை சுற்றுவட்டாரத்தில் வைத்ததில்லை. இதுவே முதல் முறை, மொத்தம் பத்திற்கும் மேற்பட்ட நபர்களின் உழைப்பில் இந்த வால் நட்சத்திரம் உருவாகியுள்ளது. நட்சத்திரத்தின் நடுவில் ஏசு கிருஸ்த்துவின் படம் உள்ளது. மாலை நேரத்தில் செவ்வானம் மறைந்து இரவு ஜெனிக்கும் தருணத்தில் அந்த வென்னிற நட்சத்திரம் பார்வையாளர்களை பரவசமைடையச் செய்கிறது.

72அடி உயரமுள்ள இந்த நட்சத்திரம் எம்.எஸ் பைப், எம்.எஸ் ஃப்ளாட் மற்றும் மெல்லிய ஃப்ளெக்ஸ் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் 60 ட்யூப் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதைகாண பலரும் வருகிறார்கள் பாராட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தை உருவாகிய குழுவினரிடம் இது குறித்து கேட்டபோது,

”இதற்கு முன் செய்த நட்சத்திரம் தான், இதை நாங்கள் செய்ய காரணம். முதலில் சாண்டா கிளாஸ் செய்வதாக தான் இருந்தது, இந்த முறை அதை செய்ய முடியவில்லை, அதனால் நட்சத்திரத்தையே முன்பு செய்ததை விட அதிகமாக செய்யலாம் என்ற முடிவு செய்தோம். அதன் விளைவே இந்த பிரம்மாண்ட நட்சத்திரம். இதை செய்வதற்கு பெரிய காரணங்கள் இல்லை, ஏதாவது செய்ய வேண்டும் என்ற இளைஞர்களின் ஆர்வம் தான், எங்கள் இளைஞர் அணி உறுப்பினர்கள் இல்லாமல் இதை செய்திருக்கவே முடியாது. இதில் அனைவரின் பங்கும் இருக்கிறது, இதே போல் மென்மேலும் செய்ய ஆசையாக உள்ளது” எனக் கூறினர்.

மேலும் படிக்க