• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிஸ்டல் ஆபரணங்கள், பேசன் வகை பொருட்களுக்கான ஸ்வரோஸ்கி கிளை கோவையில் துவக்கம்

March 9, 2021 தண்டோரா குழு

சர்வதேச அளவில் பெண்களுக்கான கிரிஸ்டல் ஆபரணங்கள் மற்றும் பேசன் வகை பொருட்களுக்கான ஸ்வரோஸ்கி (SWAROVSKI) தமிழக அளவில் சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் தனது கிளையை துவக்கியது.

1895 ஆம் ஆண்டு துவங்கி 125 ஆண்டுகள் கிரிஸ்டல் வகை ஆபரணங்களில் பாரம்பரியம் கொண்ட ஸ்வரோஸ்கி தனது கிளையை கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் துவங்கியுள்ளது.இதில் பெண்களுக்கென பிரத்யேக கிரிஸ்டல் கற்களால் ஆன அழகான நெக்லஸ்கள்,கம்மல்கள்,சிறிய வகையிலான செயின்கள் மற்றும் கிரிஸ்டல் கற்களால் ஆன அழகான பேனாக்கள் ,குறிப்பாக ஸ்வரோஸ்கி வகை கை கடிகாரங்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் என முழுக்க கிரிஸ்டல் வகையிலான பொருட்கள் இங்கு உள்ளது.

ஸ்வரோஸ்கி குறித்து அதன் இயக்குனர் துஷார் அகர்வால் கோவை கிளையின் மேலாளர் விஷ்ணு ஆகியோர் கூறுகையில்,

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே எங்களது ஷோரூம் உள்ளதாகவும்,இதில் குறிப்பாக தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் கிளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், வைரக்கற்களை போன்ற கிரிஸ்டல் வகை ஆபரணங்களை தற்போது அதிக பெண்கள் விரும்புவதாகவும்,இதனை கருத்தில் கொண்டு உயர் தர அளவிலான டிசைன்களில் எங்களது ஆபரணங்கள் உருவாக்கப்படுவதாகவும், குறிப்பாக ஸ்விஸ் தயாரிப்பான எங்களது பிராண்ட் கைகடிகாரங்கள் அழகான டிசைன்களில் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க