October 9, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளரான சியட் நிறுவனமானது, சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகளின் 27வது எடிஷனை பிரம்மாண்டமாக கொண்டாடியது. இது உலகளாவிய கிரிக்கெட் வரலாற்றில் பெருமை கொள்ளும் ஒரு மைல்கல் நிகழ்வாகும்.
இந்நிகழ்வில், கடந்த ஆண்டின் மிகச்சிறந்த சாதனைகளைப் பாராட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூடியிருந்தனர். அங்கீகாரம் மற்றும் நட்சத்திர சக்தியின் கலவையுடன், சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் விளையாட்டின் மிகவும் புகழ்பெற்ற திறமைக்கு மரியாதை அளிக்கும் தனித்துவமான விருதாகப் பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா கூறுகையில்,
“சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகளின் ஒவ்வொரு வருட எடிஷனும் கிரிக்கெட்டின் அதி மாயாஜாலத்தை நினைவூட்டுவதாகும். ஒரு ரசிகனாக, புள்ளிவிவரங்கள் மற்றும் பதிவுகளுக்கு அப்பால், உறுதிப்பாடு, கலைத்திறன் மற்றும் முழுமையான மன உறுதியின் கதைகள்தான் நம்மை வசீகரிக்கின்றன என்பதை நான் அறிவேன். சியட் -ல், இந்த விளையாட்டை தங்கள் மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் வரையறுத்தவர்களை கௌரவிப்பது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்.
மேலும் அவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.
சியட் கிரிக்கெட் ரேட்டிங்ஸ் விருதின் தலைமை நடுவரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான. சுனில் கவாஸ்கர் கூறுகையில்,
” ஒவ்வொருவரின் செயல்திறனை மதிப்பிட்டு கெளரவிக்கும் நேர்மையே சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுளின் தனித்துவமாகும். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, இந்த தளம் கிரிக்கெட் சாதனைக்கான நம்பகமான சிகரமாக விளங்கிவருகிறது. இந்த ஆண்டு கௌரவிக்கப்பட்டவர்கள் தங்கள் திறமை, தைரியம் மற்றும் அமைதியால் விளையாட்டை ஒளிரச் செய்துள்ளனர். இவ்விருது நிகழ்வானது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இருவரையும் ஊக்குவிக்கும் ஒன்றாகும்” என்றார்.
சியட் வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற பிரையன் லாரா கூறுகையில்,
“இதுபோன்ற ஒரு புகழ்பெற்ற மன்றத்தில் இந்த பாராட்டு வழங்கப்படுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இவ்விருதால் நினைவுகூரப்பட்டு அங்கீகரிக்கப்படுவது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எண்ணற்ற மணிநேர தயாரிப்பு மற்றும் ஒவ்வொரு செயல்திறனையும் இயக்கும் கூட்டு மனப்பான்மையின் பிரதிபலிப்பாக செயல்படுகிறது. அந்த முயற்சிகளை அங்கீகரித்ததற்காக சியட் -க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”சியட் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற சந்திரசேகர் பேசுகையில்,
“இந்த விருது நிகழ்வை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். இது, மிக மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது கிரிக்கெட்டில் மிகச் சிறந்தவர்களை கௌரவித்துவருகிறது.இது அதிசிறந்த ஊக்கத்தை அனைவருக்கும் தருகிறது, மேலும் விளையாட்டு வழங்கும் சாத்தியக்கூறுகளில் நம்பிக்கை கொள்ள இன்னும் பல வீரர்களை ஊக்குவிக்கிறது என்று நம்புகிறேன்.”