• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு

June 5, 2025 தண்டோரா குழு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தின் சார்பில் செட்டிபாளையம் ஓராட்டு குப்பை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே,கோவை மாவட்ட
கனிம வளம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம்,
கிரசர் மற்றும் குவாரிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி,மாவட்டத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ்,செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி
மற்றும் குவாரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மா,அரசு,வாகை,புங்கன்,அகில் என பல்வேறு வகையான 3000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.மேட்டுப்பாளையத்தில் கிரஷர் மற்றும் குவாரிகள் சங்க மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.மாவட்ட அளவில் 5000 மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டன.

ஏற்கனவே குவாரி மற்றும் கிரசர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் பல ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. பசுமை தோற்றம் ஏற்படுத்தும் வகையில் முட்புதராக கிடக்கும் காடுகளை சீரமைத்து மழைதரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பாகவும் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது.

மேலும் படிக்க