• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மஜகவினர் கைது

August 9, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் மைதீன்உலவி,துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான்அமீர், கண்டன உரையாற்றினர்.

அப்போது காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற மஜக வினரை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க