• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் தாக்குதல்: ராணுவத்தில் சேர குவிந்த இளைஞர்கள் விண்ணப்பங்கள்

February 20, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படையினரால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடந்து ஒரு சில தினங்களே ஆன நிலையில், ராணுவத்தில் இணைய ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பாரமுல்லா பகுதியில் 111 பணியிடங்களுக்கு, 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அப்பகுதியில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், எந்த வேலை கிடைத்தாலும் தற்போதைய சூழலில் போதும் என்ற மனநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ராணுவத்தில் சேர சி.டி.எஸ். தேர்வில் பங்கேற்க வேண்டும். பின் மருத்துவம், உடல் தகுதி தேர்வுகள் நடக்கும். தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்டாஃப் செலெக்‌ஷன் போர்டு நடத்தும் நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள். இதில், தேர்வானவர்களுக்கு சம்பந்தப்பட்ட இன்ஸ்டியூட்டில் இருந்து அழைப்பு வரும். மேலும், மூன்று வகைகளில் பெண்கள் தேர்வாகிறார்கள். அவை, தொழில்நுட்பம், தொழில்நுட்பமில்லாத பிரிவு, சட்டம் ஆகியவை ஆகும்.

குறிப்பாக, ஒவ்வொரு ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்தே வேலை செய்கிறார்கள். இன்றோ, நாளையோ தாக்குதல் நடைபெறலாம். அப்படியிருக்க, தேசப்பற்று இல்லாத ஒருவரால் எப்படி அந்த பணியில் இணைய முடியும். ஆகையால், வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே, முழுமைக்கும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

மேலும் படிக்க