• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல – பிரதமர் மோடி

February 23, 2019 தண்டோரா குழு

காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. புல்வாமா தாக்குதலில் தங்களது உறவினரை இழந்து தவிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு நான் உறுதி அளிக்கிறேன். நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்க்ள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம். காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில், தீவிபத்து ஏற்பட்ட போது, பாதிக்கப் பட்டவர்களுக்காக, ரத்தம் வழங்க காஷ்மீர் மக்கள் ஏராளமானோர் முன்வந்தனர்.

காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க