• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது – ஜி.ராமகிருஷ்ணன்

April 12, 2018 தண்டோரா குழு

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறி வருகிறது என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் கருப்பு கொடி கட்டிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் முடிவு படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டபட்டது. பிரதமர் மோடியின் மத்திய அரசிற்கு எதிராக தமிழகமே போர்க்களமாக மாறியிருக்கிறது என்றும்,டெல்டா பிரதேசம் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகியள்ளாதகவும் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது என்று கூறியவர், ஈரோட்டில் தர்மலிங்கம் என்பவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உயிர் தியாகம் செய்வது ஏற்புடையதல்ல அதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும்,பல்வேறு இடங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போது அதை காவல்துறையினர் பறிமுதல் செய்வது கண்டனத்துக்குரியது என்றும் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமையாகும்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க