• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

March 15, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் முதலமைச்சர் பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றபட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தில் கருப்புச் சட்டையுடன் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி கொண்டுவந்தார்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்கவேண்டும் என சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் தீர்மானம் வாசித்தார்.  கடந்த காலங்களை போலவே மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் உள்ளிட்ட கட்சிகள் முழு ஆதரவு அளித்தது. இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, சட்டப் பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் படிக்க