• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம்:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

March 27, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.இதனையடுத்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் புதுடில்லியில் வழக்கறிஞர் சேகர்நாப்தே-வை சந்தித்து கலந்தாலோசித்தனர்.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மார்ச் 31-ம் தேதி  உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சேகர்நாப்தே தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

மேலும் படிக்க