September 20, 2017 
தண்டோரா குழு
                                நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  புனித நீராடினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினார்.இந்நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர்களும் கலந்துக் கொண்டு  புனித நீராடினார்கள். 
காவிரியில் முதலமைச்சர் நீராடுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து நாகையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள உள்ளார்.