August 3, 2020
தண்டோரா குழு
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் காந்திபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காவல்துறை சித்திரவதை செய்வதை கண்டித்தும் அதற்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
தென்காசி அணைக்கரை விவசாயி முத்துவை படுகொலை செய்த வனத்துறை காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ராணிப்பேட்டை ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்டவிரோதமாக கைது செய்து சித்திரவதை படுத்திய காட்பாடி காவல்துறை ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் வெண்ணிலா நீதித்துறை நடுவர் சரவணன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.