• Download mobile app
14 Jan 2026, WednesdayEdition - 3626
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையினர் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்

January 23, 2017 தண்டோரா குழு

அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பகுதியைக் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், கிராம மக்கள் என தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என அவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து போராட்டக்காரர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதனால் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகளைக் காவல் துறையினர் பெண் காவலர்களைக் கொண்டு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

அதன் பின் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்களை குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பகுதியை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க