• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவலராக பணிபுரியும் தந்தை மீது மகன்கள் புகார்

June 28, 2018

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ.இவருடைய மனைவியும் பேரூர் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ப்ரத்யூம்னா(15) மற்றும் ஹேமந்தரா(10) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் போத்தனூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட தந்தை செய்து கொடுக்க மறுப்பதாகவும்,சரியாக வீட்டிற்கு வராமலும்,குடும்பத்தை கவனிக்காமலும் இருப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரு மகன்கள் வந்து புகார் மனு கொடுத்தனர்.

தந்தையின் இச்செயல்களால் என்னுடைய மனமும்,தனது தம்பியும் மனமும் மிகவும் பாதிக்கப்படைந்துள்ளதாகவும்,இதனால் படிப்பில் தங்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது புகார் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க