September 8, 2020
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசும் மாநகராட்சி நிர்வாகமும் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முழக்கங்களை எழுப்பினர்.
உள்ளூர் பணியிடமாற்றம்,மினி மையப் பணியாளர்களில் 3 ஆண்டு முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உதவியாளர்களுக்கு 10 வருடம் படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும்,தற்போது பணியிட மாறுதல் நேரடி நியமனம் ஆக்கப்படுவதால் பணியாளர்களின் நிலை பாதிக்கப்படுகிறது என்றும் எனவே பணி இடமாற்றம் பதவி உயர்வு ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.