• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை

August 10, 2017 தண்டோரா குழு

தேடப்படும் நபராக அறிவித்த கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக அந்நிய முதலீடு பெற்றது தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் நேரில் ஆஜராக கார்த்திக் சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

இதனை ரத்து செய்யக்கோரி கார்த்திக் சிதம்பரம் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் சுற்றறிக்கைக்கு செப்டம்பர் 4ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்து பதில் அளிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க