• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை பள்ளி மாணவன் தற்கொலை விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

December 20, 2019

காரமடை வித்யவிகாஷ் பள்ளியை சேர்ந்த ஹரிஷ் (17) என்ற மாணவன் நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்டு தர்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தக்கோரி மாணவனின் உறவினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியினரின் மகன் ஹரிஷ் காரமடை வித்யவிகாஷ் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். நேற்று மாலை தனியார் விடுதியில் ஹரிஷ் தூக்கிட்டு இறந்து கடந்த நிலையில் காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இன்று மாணவனின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று மாலை மாணவனின் உறவினர்கள் சுமார் 100 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க