• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள் – மக்கள் அச்சம்

January 8, 2021 தண்டோரா குழு

காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு வாடகைக்கு கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு,வீடு புகுந்து 6 சவரன் நகை திருட்டு,நகைக்கடையில் நகை வாங்குவது போல் நகையை பிடுங்கி சென்றது உள்ளிட்ட 3 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,மிலிதன் கிராமத்தை சேர்ந்தவர் முத்தன்.இவரது மனைவி விஜயலட்சுமி.இவர்கள் காரமடை காந்தி நகரில் வசித்து வருகின்றனர். நேற்று விஜயலட்சுமி தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் மற்றொருவர் என இருவர் கும்பல் பட்டப்பகலில் பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காரமடை காவல் துறையினர் கூறுகையில்,

இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலை சேர்ந்தவர்கள் என்றும்,அக்கும்பலை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும், இன்னும் இரு தினங்களில் குற்றவாளிகள் சிக்குவர் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடைபெற்று வரும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க