• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமராஜர் பிறந்த நாளில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கிய திராவிடன் அறக்கட்டளை

July 15, 2020 தண்டோரா குழு

கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருமான காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.பல்வேறு தரப்பினரும் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வரும் சூழலில், கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் கோவை பாபு கூறுகையில்,

“காமராஜரின் நினைவு தினத்தில், கோவையில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை சார்பில் சமூக பணிகளுக்கான இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டு நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, இன்று காந்திமாநகர் மாநகரில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். இந்தாண்டுக்குள் கோவையில் 100 இடங்களில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும்.” என்றார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமால கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், தங்கராஜ், பயிற்சி பள்ளி ஆசிரியர் கவிதா பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க