• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரம் டவுன் மற்றும் மப்சல் பேருந்து நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

October 26, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக காந்திபுரத்தில் உள்ள டவுன் மற்றும் மப்சல் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், கடைகள் முன்பாக நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உள்ளிட்டவை மாநகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ தீபாவளி பண்டிகையையொட்டி காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சியின் டவுன் மற்றும் மப்சல் பேருந்து நிலையங்களில் உள்பகுதி மற்றும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் நடந்து செல்லவும், வாகனத்தில் செல்வோரும் கடும் அவதிக்கு உட்பட்டனர்.

இதனை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதையில் கடை வியாபாரிகளால் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. சுமார் 40க்கும் மேற்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டன,’’ என்றார்.

மேலும் படிக்க