August 21, 2017
தண்டோரா குழு
சீனாவில் காதில் அதிக வலி இருப்பதால், மருத்துவரிடம் சென்றவர் காதிலிருந்து வாலில்லா பல்லியை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் கோங்ஷூ நகரை சேர்ந்த ஒருவர், தன்னுடைய காதில் ஏதோ அசைந்துக்கொண்டு இருப்பதை உணர்ந்துள்ளார். அதோடு அவருடைய காதில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவர்கள் அவருடைய காதை பரிசோதித்தபோது, அவருடைய காதில் பல்லி ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அதை வெளியே எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து, அந்த நபருடேய காதிலிருந்த பல்லி தலைக்குள் செல்லாமல் இருக்க, அதற்கு மயக்கம் ஏற்படுத்தினர். பிறகு, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ப்லைஎர்ஸ்’ என்னும் கருவி மூலம் அதை வெளியே எடுத்தனர்.
அதை வெளியே எடுத்தபோது, அந்த பல்லிக்கு வால் இல்லாததை பார்த்துனர். ஒருவேளை அவர்கள் அதை வெளியே எடுக்கும்போது, அதன் வால் வெட்டப்பட்டிருக்கலாம் என்று மீண்டும் ஒருமுறை, அவருடைய காதை சரிபார்த்தனர். ஆனால், அந்த வால் அவருடைய காதில் இல்லை. ஒருவேளை
அந்த பல்லி நோயாளியின் காதில் நுழைவதற்கு முன்பதாகவே, ஏதோ ஒரு விதத்தில், அது தன்னுடைய வாலை இழந்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.