• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காதலனுடன் தான் வாழ்வேன் என அடம் பிடித்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவன்

May 31, 2018 தண்டோரா குழு

கான்பூர் அருகிலுள்ள சானிக்வன் கிராமத்தை சேர்ந்தவர் சுஜித் என்கிற கோலு.இவருக்கும் உத்தரபிரதேசம் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான ஒரே மாதத்தில் சாந்தி கொஞ்சம் நாட்கள் என் வீட்டில் இருந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.சுஜித்தும் அனுப்பபி வைத்துள்ளார்.நீண்ட நாட்களாக ஆகியும் சாந்தி திரும்பி வரவில்லை.இதையடுத்து சுஜித் சாந்தி வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.அதற்கு அவர் மறுத்து விட்டார்.

அப்போது சுஜித் ஏன் என கேட்க சாந்தி தன் காதல் கதையை கண்ணீருடன் கூறியுள்ளார்.ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும்,ஆனால் தனது சம்மதததை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர்.காதலனை மனதில் சுமந்து கொண்டு உங்களுடன் வாழ முடியவில்லை என்று கூறினார்.

இதனைத்கேட்ட சுஜித் அவ்வளவு தானே நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளார்.முதலில் காதலனிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.பின்னர் தங்கள் இரு வீட்டாரிடமும் சுஜித் இது குறித்து பேசியுள்ளார்.ஆனால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது முடிவை தெரிவித்தார்.போலீசார் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து,நேற்று சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், காதலன் ரவியையும் சுஜித் வரவழைத்தார்.அவர்களது உறவினர்களும் வந்தனர்.அவர்கள் முன்னிலையில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார்.இருவரும் கோவிலிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து சுஜித் கூறும்போது,

முதலில் தப்பாக தான் தெரிந்தது.இருவரையும் கொன்று விடலாமா? என்று கூட நினைத்தேன். ஆனால் தேவையில்லாமல் குடும்பம் பாதிக்கப்படும் என தோணியது.பின்னர் பெரியவங்களுடன் கலந்து பேசி இப்படி ஒரு முடிவெடுத்தேன்.இப்ப இவர்கள் சந்தோஷமா வாழ்வார்கள் எனக் கூறியுள்ளார்.சுஜித்தின் இந்த செயலுக்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்த வருகின்றது.

மேலும் படிக்க