• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காணமல் போன கடல் கிடைத்துவிட்டது

May 9, 2017 தண்டோரா குழு

ஐயர்லாந்தில் 3௦ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கடல், அங்கு வீசிய சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக மீண்டும் தோன்றியது. இந்த அதிசயம் அந்நாட்டு மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐயர்லாந்து நாட்டில் ஆச்சில் தீவில் டூவாக் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. அங்கு 3௦௦ மீட்டர் நீளத்தில் அழகான மையோ கடல் பகுதி உள்ளது . அந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு பிரபலமானது. உணவு விடுதிகள், தேநீர் விடுதிகள், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் ஆகியவை கடற்கரை பகுதியில் அழகுடன் காணப்பட்டன.

எதிர்பாராதவிதமாக, 1984-ம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் இந்த கடல் உள்வாங்கிவிட்டது. இதனால் அந்த கடல் காணமல் போய்விட்டது என்று அப்பகுதி மக்கள் கூறிவந்தனர்.

இதையடுத்து அந்த இடத்தில் வெறும் பாறைகளும் சிறு சிறு குளங்களும் மட்டுமே இருந்தன. இதனால் சுற்றுலா பயணிகளும் அந்த இடத்திற்கு வருவதை விரும்பவில்லை. டூவாக்கில் இருந்த அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன. இதனால், வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு ஈஸ்ட்டர் திருவிழாவின்போது, அங்கு பெரிய அளவில் சூறாவளி காற்று வீசியது. அதன் பின் சிறிது நேரத்தில், முன்பு கடல் சூழ்ந்திருந்த இடத்தில் மணல்கள் மலை போல் குவிந்தன. 1௦ நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், அந்த இடம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இதனால் காணமல் போன கடல் மீண்டும் அந்த இடத்திற்கு வந்ததை போல் அந்த இடம் உருவானது.

ஆச்சில் சுற்றுலா அதிகாரி, சியன் மொல்லாய் கூறுகையில், “கடல் மீண்டும் அந்த பகுதியை சூழ்ந்துள்ளதை கண்ட உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த கடல் கடைசியாக 1984-ம் ஆண்டு தான் பார்த்தோம். அதற்கு பிறகு தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலமாக இருந்தது. ஏப்ரல் மாதல் ஏற்பட்ட சூறவெளி காற்றும், 1௦ நாளாக தொடர்ந்து பெய்த கடும் மழையால், மீண்டும் கடல் உருவாகியுள்ளது” என்றார்.

“மீண்டும் உருவாகிய மழையால் சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் தொடங்கியுள்ளது. முன்பிருந்த வெறும் பாறைகளில் இருந்த இடம், இப்போது தண்ணீர் சூழ்த்த கடலாக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது” என்று உள்ளூர் விடுதி உரிமையாளர், ஆலன் கில்டி கூறினார்.

மேலும் படிக்க