• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காட்மேன் என்ற ஆன்லைன் திரைப்படத்தை தடை செய்யகோரி கோவை கமிஷ்னரிடம் மனு

May 28, 2020 தண்டோரா குழு

காட்மேன் என்ற ஆன்லைன் திரைப்படத்தில் பிராமணர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்கள் உள்ளது எனவே உடனடியாக அந்த ஆன்லைன் திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற சங்கத்தினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

காட் மேன் என்னும் ஆன்லைன் திரைப்படம் சமீபத்தில் ஜீ5 என்ற சேனலில் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் பிராமணர்களை பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் பல்வேறு கொச்சையான கருத்துக்களும் காட்சிகளும் வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தணர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் ஜெயபிரகாஷ் அறிவுரத்தலின்பேரில் கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

இந்த ஆன்லைன் திரைப் படத்தில் பிராமணர்களை பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் அவதூறாக கருத்துகளையும் காட்சிகளையும் பதிவு செய்துள்ளனர் மேலும் ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் வகையில் மதரீதியாக பிளவுகளுக்கு தூண்டும் வகையிலும் இந்த திரைப்படம் உள்ளது. மேலும் இந்து மதத்தின் வழிபாடுகளையும் கொச்சைப் படுத்தி உள்ளனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை கொச்சைபடுத்தி உள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே உடனடியாக இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாநில பொருளாளர் மணிகண்டன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் செல்வம்,பொருளாளர் வினோத் உட்பட மகளீர் அணி நிர்வாகிகள் சேர்ந்து புகாரை அளித்தனர்.

மேலும் படிக்க