• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ்ன் 56வது கிளையை துவக்கி வைத்த நடிகை ஸ்ருதி ஹாசன்

October 16, 2023 தண்டோரா குழு

சமீபத்தில் பங்குச் சந்தையில் வெற்றிகரமாக பட்டியலிடப்பட்ட சாய் சில்க் கலா மந்திர் பாரம்பரியமிக்க ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. அடுத்த மூன்று நிதி ஆண்டுகளில் 30 புதிய பல்வேறு வகையான விற்பனையகங்களை துவக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் 100 அடி ரோட்டில் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ்ன் 56வது விற்பனையாகத்தை, தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட முன்னணி, பிரபல நடிகையான சுருதிஹாசன் துவக்கி இன்று துவக்கி வைத்தார்.

இந்த விற்பனையாகத்தில் உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி, காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட், ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகள் இடம்பெற்றுள்ளன.ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் வலுவான இடத்தை பெற்றுள்ள இந்த நிறுவனம், பல்வேறு வகையான சேலைகள் லெகங்கா மற்றும் ஆண்கள், குழந்தைகளுக்கான நவீன ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.

சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் முதன்மை நிர்வாக இயக்குனர் பிரசாத், சாலவாடி கூறுகையில்,

வெற்றிகரமான பங்கு வெளியீட்டிற்கு பிறகு ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் எங்களது விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் எங்களது வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த, கோவை போன்ற நகரங்களில் விற்பனையாங்கலை துவக்கி வருகிறோம்.

நேற்று எங்களது 55 – வது ஷோரூம் கோவை ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷால் துவக்கி வைக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை வாங்கும் திறன் கொண்ட நகரமாக கோவை உள்ளது. மிக வேகமாக வளர்ச்சி பெறும் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றாக உள்ளது. கல்வி, மருத்துவம், உற்பத்தி போன்றவை சிறந்து விளங்குகிறது,” என்றார்.

பாரம்பரிய மிக்க கலாச்சார உடைகளை மக்கள் விரும்பி வாங்கும், தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், சங்கராந்தி போன்ற திருவிழா காலத்தில் விற்பனையாகத்தை துவங்க இதுவே சரியான, சிறப்பான தருணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

மேலும் படிக்க