• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காசோலைகளை முற்றிலும் ஒழிக்க திட்டமா?

November 21, 2017 தண்டோரா குழு

மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை முற்றிலும் ஒழிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீண் கந்தேல்வால் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நாட்டில் உள்ள 80 கோடி ஏ.டி.எம் கார்டுகளில் 5 சதவிகிதம் மட்டுமே பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறார்கள்.95 சதவிகிதம் மக்கள்ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதற்கு மட்டுமே தங்கள் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்.வர்த்தகர்கள் அனைவரும் தங்களது வரவு – செலவு நடவடிக்கைகளை முழுமையாக மின்னணுப் பரிவர்த்தனைக்கு மாற்றி வருகிறார்கள். இதனால், எதிர்காலத்தில்மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலைகளை முற்றிலும் ஒழிக்க வாய்ப்புள்ளது என்றார்.

தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காசோலை நடைமுறை ஒழிக்கப்படுமானால், அது மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.பணமதிப்பிழப்பிற்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 100 கோடியை எட்டிய மின்னணுப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை, தற்போது 87 கோடி என்ற அளவில் நிலைபெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க