August 28, 2020
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் கொரோனா தொற்றால் காலமானார்.
வசந்த் அன்ட் கோ-வின் நிறுவனரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமானவர் வசந்தகுமார். இவர்காங்கிரஸ் கட்சியின் சார்பில்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்
கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரலில் சளி அதிகமாகி,மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், வயது மூப்பு, நீரழிவு நோய் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணங்களாலும்,தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட இவர்,இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு வயது 70.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.