• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக்

April 1, 2019 தண்டோரா குழு

இந்தியாவின் மிக முக்கிய கட்சிகளுள் குறிப்பிடத்தக்கதான காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அங்கம் வகிப்பவர்களுடன் தொடர்புடைய 687 கணக்குகள் பக்கங்கள் குழுக்கள் ஆகியவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

2019ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய தொடர்புடையவர்கள் நம்பகத்தன்மையற்ற வகையில் ஸ்பேம் தகவல்களை பரப்பியதால் காங்கிரஸ் கட்சியின் 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் பாக். ராணுவத்தின் ஆதரவுடன் இந்தியாவை குறிவைத்து செயல்பட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது .

தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு தேவையற்ற தகவல்களை (spam) பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு கொள்கை பிரிவின் தலைவர் நதானியல் தெரிவித்துள்ளார். எங்களது சேவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதே போல் பாகிஸ்தானிய ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் ரசிகர் பக்கங்களை தொடங்கி பாகிஸ்தான் அரசியல், அரசியல் தலைவர்கள், இந்திய அரசு, பாகிஸ்தான் ராணுவம் குறித்த தகவல்களை பரப்பியதால் 103 ஃபேஸ்புக் பக்கங்கள், குழுக்கள், கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு பின்னரே இந்த செயல்பாடு அதிகரித்ததாகவும் நதானியல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க