• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி முடக்கப்பட்டிருந்தது’ – மோடி

May 26, 2017 தண்டோரா குழு

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி முடக்கப்பட்டிருந்தது. ஆனால் பாஜக- வின் ஆட்சியில் நாட்டின் கனவை நாங்கள் நிறைவேற்றியுள்ளாம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அசாம் – அருணாசல பிரதேஷ் மாநிலங்களை இணைக்கும் தோலா – சதியா இடையேயான பாலத்தை திறந்து வைத்து மோடி பேசியதாவது;

“அசாம், அருணாசல பிரதேஷ மக்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதை பார்க்க முடிகிறது.

2003-ம் ஆண்டு இந்த பாலத்தை கட்ட வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு பா.ஜ.க, எம்.எல்.ஏ., ஜெகதீஷ் கடிதம் எழுதினார். அதற்கு வாஜ்பாய் அனுமதி வழங்கினார்.

ஆனால், ஆட்சி மாறியபின்னர் இந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது.இந்த பாலம் தற்போது கட்டப்பட்டதன் மூலம் வாஜ்பாய் அரசின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக 50 வருடங்களாக மக்கள் காத்திருந்தனர்.

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி முடக்கப்பட்டிருந்தது. ஆனால் பாஜக- வின் ஆட்சியில் நாட்டின் கனவை நாங்கள் நிறைவேற்றியுள்ளாம். இந்த பாலம் அசாம்- அருணாசல பிரதேஷ இரு மாநிலத்தின் வளர்ச்சியை இணைக்கிறது.

அசாமில் பா.ஜ.க, ஆட்சி அமைந்து ஒரு வருடத்தில் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அனைத்து இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.”
இவ்வாறு மோடி கூறினார்.

மேலும் படிக்க