• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸிலிருந்து விலகிய கமல் பட நடிகை

September 10, 2019 தண்டோரா குழு

பாலிவுட் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய உர்மிளா மாடோண்ட்கர் செவ்வாய்க்கிழமை கட்சியில் இருந்து விலகினார்.

இந்தியன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் உர்மிலா மட்டோண்ட்கர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 5 மாதங்களுக்கு முன்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சிறிய அரசியல் காரணங்களால் தான் கட்சியை விட்டு விலகுவதாக உர்மிளா தெரிவித்துள்ளார்.

தனது விலகல் குறித்து உர்மிலா, “

“எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் கட்சியில் உள்ள அதிகாரங்கள் புறக்கணிக்கிறது. ஒரு பெரிய வேலை செய்வதற்குப் பதிலாக உட்கட்சி பூசலை எதிர்த்துப் போராடுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மும்பை காங்கிரசில் இலக்கை எட்ட முயன்று ஏமாற்றங்களுடன் விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது அதிருப்தி குறித்து மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த மிலிந்த் தியோராவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அது கசியவிடப்பட்டதாகவும் உர்மிலா புகார் தெரிவிக்கிறார். “எனது கடிதம் குறித்து வெளியே தெரிவித்தது துரோகம் செய்ததற்கு சமம். அதில் பல முக்கியமான, தனிப்பட்ட வகையிலான விஷயங்களை எழுதியிருந்தேன். ஊடகங்களில் அது லீக் செய்யப்பட்டது” என்று அந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் உர்மிலா.

மும்பை காங்கிரஸ் பொறுத்தவரையில்., கடந்த சில தினங்களாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. கட்சியின் தலைமையை தேர்ந்தெடுப்பதில் துவங்கி பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது உர்மிளா மாடோண்ட்கரின் ராஜினாமா மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட மற்றொரு அடியாகவே கருதப்படுகிறது. மும்பை வடக்கிலிருந்து மக்களவைத் தொகுதியில் உர்மிளா மாடோண்ட்கர் போட்டியிட்டார், ஆனால் பாஜக-வின் கோபால் ஷெட்டியிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க