• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் : துவக்கி வைப்பு

February 4, 2021 தண்டோரா குழு

ஜெர்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.108.16 கோடி மதிப்பீட்டில், கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த ரூ.108.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதி மூலமாக ரூ.61.80 கோடி கடனாகவும், ரூ.30.90 கோடி தமிழக அரசு மானியமாகவும் மற்றும் கோவை மாநகராட்சி பங்களிப்புத் தொகையாக ரூ.15.46 கோடியும் ஒதுக்கப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து 6.52 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்படுகிறது. அதனை ஜெய் நகரில் உள்ள 10 லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து நீர் இறைப்பான் மூலம் உந்தப்பட்டு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.

மேலும் கூடுதலாக குடிநீர் எடுக்கப்பட்டு கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு என புதியதாக கட்டப்பட்டுள்ள 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 19 மேல்நிலைத் தொட்டிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படும். அதிலிருந்து 26 ஆயிரத்து 659 வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். இப்பணிகள் கடந்த 2016 துவங்கப்பட்டு தற்போது 100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைத்த உடன் குடிநீர் அபிவிருத்தி செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரவீந்திரன், கண்காணிப்பு பொறியாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க