• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுண்டம்பாளையம் மேம்பால பணிகளில் தொடரும் மந்த நிலை – மக்கள் கடும் அவதி

March 31, 2021 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மந்த கதியில் நடந்து வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள தெருக்கள் வழியாக வாகனங்கள் செல்வதால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ஜி.என்.மில் சந்திப்பில் 0.60 கிலோ மீட்டர் நீளம், 17.20 கிலோ மீட்டர் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த பால பணிகளால் மேட்டுப் பாளையம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில் கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள், கார்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக மாற்றுப்பாதைகளான வெள்ளக்கிணர் பிரிவு, துடியலூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனிடையே மேம்பாலம் பணிகள் நடைபெறும் அருகில் உள்ள தெருக்கள் வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

‘‘மாற்றுப்பாதைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது காரணமாக தான் கார்கள், இருசக்கர வாகனங்கள் மேம்பாலம் அருகில் உள்ள தெருக்கள் வழியாக செல்கிறது. இதனால் தெருக்களில் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கடைகளுக்கு நடந்து செல்லக்கூட மக்கள் அச்சமடைகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’’ என்றனர்.

மேலும் படிக்க