• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கள்ள நோட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர் மரணம்

August 4, 2022 தண்டோரா குழு

கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நஞ்சை இடையாரை சேர்ந்தவர் சுப்பையன் 70. இவர் 2006-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கள்ளநோட்டு வழக்கில் சிபிசிஐடி போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டவர்.

அவர் மீதான வழக்கு சேலம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட அவர் 2020 மார்ச் மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 2-ம் தேதி காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தன அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜெய்லர் சிவராசன் புகாரின்படி கோவை ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கை விசாரித்து வருகிறார்.

மேலும் படிக்க