• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

களத்தில் இறங்கிய மாநகராட்சி கமிஷனர் ;தனியார் பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

April 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையம் சாலை பூமார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் பூமார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் 12 நபர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரியில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டதால் ரூ.5400 அபராதமும், மற்றொரு கடைக்கு ரூ.5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், மண்டல உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க