கோவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 50 சதவீத கல்வி கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நோட்டு மாலை அணிந்து நுதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கோவையிலும் தொழில் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த சூழலில் தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணங்களை வசூலிப்பதால் பெற்றோர்கள் அவதிக்குள்ளவதாககுற்றம்சாட்டிகோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தனியார் பள்ளிகளில் நடைபெறும் கல்வி கொள்ளையை சித்தரிக்கும் வகையில் நோட்டு மாலை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டுமெனவும், தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடுக்க வேண்டுமெனவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமெனவும், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசாணை 92 ஐ அமல்படுத்த வேண்டுமெனவும்
வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது