• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்ப்பிணி பெண்களுக்கு இலவச வாகனம்

June 10, 2017 தண்டோரா குழு

கர்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களை அரசு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும் வாகான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தொடங்கி
வைத்தார்.இத்திட்டத்தின் மூலம் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் கர்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல, 1௦2 டயல் செய்தால், அவர்களுக்கு வாகனம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர், அவர்களுக்கு துணையாக வர அனுமதி உண்டு. கடந்த ஒரு மாத காலமாக, இந்த சேவையை பயன்படுத்தி, சுமார் 1௦,௦௦௦ பெண்கள் நன்மை அடைந்துள்ளனர்.

குழந்தை பிறந்து முதல் ஓர் ஆண்டிற்கு தடுப்பூசி போடவும், குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வரவும் இந்த வாகன சேவையை பெறலாம். மருத்துவமனை கல்லூரி மற்றும் மாவட்ட தலைமையக மருத்துவமனைகளில் தற்போது 80 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனத்தில் 8 குழந்தைகள் இருக்கைகளும், 16 பெண்களுக்கான இருக்கைகளும் உள்ளது.

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் பெண்கள் பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு போக்குவரத்துக்காக ரூ.1,000 செலவு செய்ய வேண்டியுள்ளது.மேலும் பெண்களையும் குழந்தைகளையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விடும் வாகனம் இருந்தால், நன்றாக இருக்குமே என்று காரணத்தால் தான், இந்த வாகன சேவையை கொண்டு வந்தோம்” என்று இத்திட்டத்தின் மேலாளர் ரூபன் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க